முன்குறிப்பு..உப்புமா பதிவென்று இதை ஒதுக்கிடாதீங்க!!!
*நம்ம தங்கத்தமிழ் *நாட்டுல பல சிற்றுண்டிகள் இருந்தாலும் உப்புமா என்ற சங்ககால(எந்த சங்கம்னு கேட்காதீங்க…)
சிற்றுண்டியின் மறுபெயர் ஆபத்பாந்தவன். இன்னொரு செல்லப்பெயர் நிலையவித்வான்(வானொலில வேறபாடகர்நிகழ்ச்சி ஏதுமில்லைன்னஅவசரத்துக்கு டக்குனு நிலையத்துக்காரங்க பாடினது வாசிச்சதை வச்சி சரிக்கட்டுவாங்க.அதனால யாராவது
திடிர்னு வீட்டுக்குவந்தாசட்டுனு செய்யக்கூடிய டிபன் என்பதால் இந்தப்பேரு )
பெங்களூர்ல இதற்கு காராபாத் என்றுபெயர். ஹோட்டலில் அழகாய் கப்பில் கொட்டி அதையே தட்டில் சின்னக்குன்றுமாதிரி கவிழ்த்து உச்சியில் தக்காளியைவட்டமாய் கட் செய்து கண்ணைக்கவரும் விதமாய் கொடுப்பாங்க..வடக்கில் கிச்சடின்னு பேரோ?
உப்புமாக்கு எதுக்கு இந்தப்பேர்வந்திருக்கும்னு யோசிச்சிபாத்தா எவ்வளவோ கவனமாபார்த்துப்பார்த்துபோட்டாலும் இதுல உப்பு இருக்கே அது ஒண்ணு கம்மியாகும் ,இல்ல அதிகமாகும். அதனால் இந்த சிற்றுண்டிக்கு உப்பு போடறப்போ," உப்பு…. மா கவனமா பாத்துப் போடுமா"ன்னு யாரோ எச்சரிச்சிருப்பாங்க… காலப்போக்கில் அதுவே உப்புமா ஆகி இருக்கலாம். சிலர் உப்மா என்கிறார்கள்
உப்புமாக்குவிடும் தண்ணீர் அதிகமானால் அது உப்புபோட்ட, ரவாபாயசமாய் ஆகிடும்,ஸ்பூன்போட்டு கொடுத்துட வேண்டியதுதான்….அப்படியே சாப்பிடுங்கன்னும் சொல்லலாம்! நீர்கம்மியாச்சுன்னு வைங்க உப்புமா, கல்லு உருண்டைதான்.
இந்தமாதிரி கல்லான உப்புமாவை ஆடுமாடுகள்,தோட்டத்தில் மேய்ந்தால்' சூ போபோன்'னு விரட்ட உபயோகிக்கலாம்!
தபாலை ஒட்டவீட்ல பசைஇல்லென்னா காதலாகிக் கசிந்துகுழைந்த உப்புமா உதவலாம்!
உப்புமாக்கள்பலரகம்.!
அவுல், அரிசி .ஜவ்வரிசி .ரவை .சேமியா, ப்ரெட் என்று விதவிதமா இருக்கு!
அரிசிஉப்புமாவும் சுட்டகத்திரிக்காய்ய்புளிகொத்சும்., ரவா உப்புமாவும் தேங்காசட்னியும், சேமியாஉப்புமாவும் தக்காளிசட்னியும்… (நாக்குலே எச்சில் ஊருதா….)நல்லகாம்பினேஷன்ஸ். மற்ற உப்புமாக்கள் இதற்குப்பின்னே க்யூவில் நிற்கின்றன.
உப்புமா கொழுக்கட்டை தெரியுமா?மிஞ்சின உப்புமாலயும் நைசா தேங்கா திருவிப்போட்டு கொழூக்கட்டை வடிவத்துல பிடிச்சி ஆவிலவச்சி எடுக்கலாம்.புளி உப்புமா என அரிசிமாவில் வண்டி எண்ணைவிட்டு செய்யலாம்.
உப்புமா டிப்ஸ் …
ரவாஉப்புமா செய்யறப்போ நெய்விட்டு வறுக்கணும், ஓவரா சிவப்பா வறுத்தா அப்றோம் அது தான் வறுபட்டதைக்காட்டிக்கொடுத்து நம்காலைவாரிடும். நல்ல பொன்மகள்நிறத்துல வறுக்கணும் அப்போதான் பொலபொலன்னு உதிர்ந்து வரும்.
பாதிஅளவுக்கு நீருக்குபதில்மோர் சேர்த்து கடசில கொத்தமல்லி இலை கேரட் துருவல் ஓரமம தூவி, ட்ரெஸ் பண்ணிங்கன்னா அவ்ளோதான் ஒன்ஸ்மோர் கேட்பாங்க!
அரிசிஉப்புமாக்கு லேசாலேசாதேங்கா எண்ணை விட்டா கேரளாவரைக்கும் மணக்கும்.
சேமியாஉப்புமாக்கு சேமியாவைவறுத்து வச்சதும் பச்சதண்ணீலகழுவணுமாம் அப்போதான் ஒட்டி உறவாடாமல் இருக்குமாம்
காய்கறிகள் நிறைய உப்புமால சேர்த்தாலே தனி ருசிதான்.
என்னங்க, உப்புமா விவரம் உப்பு சப்பில்லாம இலையே!?
உப்புமா விவரம் உதவி - தோழி ஷைலஜா.(வேறு ஏதாவது சந்தேகம் கேட்க shylaj…@gmail.com )